News December 21, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 124 ▶குறள்:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
▶பொருள்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
Similar News
News March 6, 2026
வங்கிக் கணக்கில் ₹9,000.. தமிழக அரசு இன்ப அதிர்ச்சி

ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழக அரசின் கீழ் பயன்பெறும் மகளிருக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி தான். *ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 + பொங்கல் பரிசு ₹3,000. *பிப்ரவரியில் 3 மாதத்திற்கான உரிமைத் தொகை ₹3,000 + சிறப்பு நிதி ₹2,000 என 9,000 மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும், உரிமைத் தொகையில் பயன்பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு ₹2,000 சிறப்பு நிதியும் அளிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
WhatsApp-ல் இனி கட்டணமா?

WhatsApp Plus என்ற பிரீமியம் கட்டண சந்தா சேவையை WhatsApp நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. WhatsApp தற்போது இலவச சேவையாக உள்ள நிலையில், இந்த WhatsApp Plus-ல் கட்டணத்துடன் கூடுதல் Privacy கட்டுப்பாடுகள், விரிவான Chat customization, பெரிய file sharing போன்ற அம்சங்களுடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், பழைய WhatsApp-ல் எந்த மாற்றமும் ஏற்படாது.
News March 6, 2026
விழுந்து நொறுங்கிய விமானம்.. 2 பேர் பலி

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI நேற்று மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியதை அடுத்து, அந்த விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், அதிலிருந்த விமானிகள் அனுஜ் & பூர்வேஷ் இருவரும் உயிரிழந்துள்ளனர்.


