News December 21, 2024

அஸ்வினின் அயலக செயல்பாடு குறித்து பேசிய புஜாரா

image

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினின் அயலக செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய அணியின் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “SA, ENG, NZ போன்ற அயலக மண்ணில் நடக்கும் தொடர்களில் 2,3 விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவை முக்கிய விக்கெட்டுகளாக இருக்கும். அதன் மூலம் அணியில் உள்ள மற்ற பவுலர்களுக்கு உதவுவார். அவரது ரோலை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்” என்றார்.

Similar News

News March 13, 2026

தவெகவுடன் கூட்டணியா? ரங்கசாமி கூறினார்

image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், தவெகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு, அவ்வாறு தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்தால் முதலிலேயே கூறிவிடுகிறேன் என்று புதுவை CM ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நன்றாக நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 13, 2026

OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

image

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.

News March 13, 2026

OBC Creamy Layer & Non- Creamy Layer என்றால் என்ன?

image

OBC பிரிவினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் Creamy Layer/Non-Creamy Layer என 2 அடுக்குகள் உள்ளன. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்து ஆண்டு வருமானம் ₹8 Lak-க்கு மேல் உள்ளவர்கள் Creamy Layer-ல் வருவார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது. ஆண்டுக்கு ₹8 Lak-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் Non-Creamy Layer-ல் வருவார்கள். இவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

error: Content is protected !!