News December 21, 2024
அம்பேத்கரின் பவரை பாஜக உணர்ந்திருக்கும்: பா.ரஞ்சித்

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை பாஜக இப்போது உணர்ந்திருக்கும். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய வேண்டிய நேரம் இது” என்றார்.
Similar News
News September 4, 2025
இந்திய அணியின் ஜெர்ஸிக்கு 80% டிஸ்கவுண்ட்

ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால், Dream 11-ன் ஸ்பான்சர்ஷிப்பை BCCI ரத்து செய்துள்ளது. இதனால், பழைய Dream 11 பெயர் பொறித்த ஜெர்ஸியை அடிடாஸ் நிறுவனம் வெறும் ₹1,199-க்கு தங்களது இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளது. இதனுடைய உண்மையான விலை ₹5,999 என்று இருக்கையில், அதை 80% டிஸ்கவுண்டில் அடிடாஸ் விற்கிறது. அதேபோல், இந்திய மகளிர் டெஸ்ட் அணியின் ஜெர்ஸியும் ₹1,199 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
News September 4, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

சில விஷயங்களை பார்க்கும் போதோ, கேட்கும் போதோ நமக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால், அது அறிவியல் பூர்வமான உண்மை என தெரிந்ததும், நமக்கு அதிர்ச்சியே ஏற்படும். அந்தவகையில், சில Interesting Facts-களை இங்கு தொகுத்துள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்திய, அதிர்ச்சியாக்கிய உண்மைகளை கமெண்ட் செய்யவும்.
News September 4, 2025
BREAKING: தீபாவளி பரிசு அறிவித்த பிரதமர் மோடி

தீபாவளி, சாத் பண்டிகைக்கு இரட்டை பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு <<17608536>>GST சீர்திருத்தம்<<>> உதவிகரமாக இருக்கும் என்றார். மேலும், GST-க்கு முன்பு காங்., ஆட்சியில் மருந்துகள், காப்பீடு, சமையல் பொருள்களுக்கு ஏராளமான வரி விதிக்கப்பட்டதாக கடுமையாக சாடியுள்ளார். உங்கள் கருத்து?