News December 20, 2024

JPC எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை பற்றி ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை 39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிபி சவுதரி தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் பாஜக -16 எம்பிக்கள், காங்.,-5, SP, TMC மற்றும் DMK – தலா 2, TDP, ஜன சேனா, YCP, சிவசேனா, JDU, RLD, LJSP(RV), சிவசேனா(UBT), NCP-SP, AAP, BJD மற்றும் CPI(M) கட்சிகளை சேர்ந்த தலா 1 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News September 4, 2025

BREAKING: தீபாவளி பரிசு அறிவித்த பிரதமர் மோடி

image

தீபாவளி, சாத் பண்டிகைக்கு இரட்டை பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு <<17608536>>GST சீர்திருத்தம்<<>> உதவிகரமாக இருக்கும் என்றார். மேலும், GST-க்கு முன்பு காங்., ஆட்சியில் மருந்துகள், காப்பீடு, சமையல் பொருள்களுக்கு ஏராளமான வரி விதிக்கப்பட்டதாக கடுமையாக சாடியுள்ளார். உங்கள் கருத்து?

News September 4, 2025

20-வது இடத்தில் அண்ணா பல்கலை.,

image

நாட்டின் சிறந்த பொறியியல் பல்கலை.,யான அண்ணா பல்கலை.,க்கு இது இறங்குமுகம். ஆம், தரவரிசையில் 2023-ல் 13-வது இடத்தில் இருந்த இது, 2025-ல் 20-வது இடத்துக்கும், Overall பிரிவில் 29-வது இடத்துக்கும் சரிந்துள்ளது. இந்த பல்கலை., வளாகத்தில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தால், பெயர் கெட்டுவிடக் கூடாது என மின்னல் வேக நடவடிக்கை எடுத்த அரசு, இதையும் அதே வேகத்தில் சரிசெய்யுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News September 4, 2025

ரேப் கேஸில் இருந்து பாக்., வீரர் விடுதலை

image

பாக்., கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை பிரிட்டன் போலீசார் முடித்து வைத்தனர். போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவரை விடுதலை செய்தனர். பிரிட்டன் வாழ் பாக்., வம்சாவளி பெண் அளித்த புகாரில், ஹைதர் அலி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால், குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என கூறி விசாரணைக்கு அலி முழு ஒத்துழைப்பை வழங்கிய நிலையில், PCB-யும் அவருக்கு சட்ட உதவிகளை வழங்கியது.

error: Content is protected !!