News December 20, 2024
வேலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் இன்று (20.12.2024) பகல் 12 மணி அளவில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு தலைவர் மு.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 24, 2025
வேலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

வேலூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
வேலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து குடியாத்தம், காட்பாடி ரோடு, இராஜா கோயில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ஆர்.ஜி.டி திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 2 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 24, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.