News December 20, 2024
2024-ல் இந்தியாவின் முக்கிய சாதனை எது?

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, இந்த ஆண்டில் இந்தியாவின் சாதனைகள் குறித்து X-ல் இட்டுள்ள பதிவில் சந்திரயான் -3 மிஷன் வெற்றியை முக்கிய சாதனையாக கூறுகிறார். அடுத்து உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது, G20 தலைமை, டிஜிட்டல் இந்தியாவின் எழுச்சி, 110 யுனிகார்ன் நிறுவனங்களின் வளர்ச்சி, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, உலகக் கோப்பை வெற்றி, க்ரீன் எனர்ஜி அதிகரிப்பு ஆகியவற்றை கூறுகிறார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 3, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS விளக்கம்

திமுக கூட்டணி கட்சிகளே ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கிவிடுவார் என EPS விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.
News September 3, 2025
லண்டன் சென்றடைந்தார் CM ஸ்டாலின்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, லண்டனில் முக்கிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளார். முன்னதாக, ஜெர்மனியில் ₹3.201 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
News September 3, 2025
நீதிமன்றங்களில் AI பயன்பாடு?

பள்ளி மாணவர்களும் AI கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலகில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நீதித்துறையிலும் AI நுழைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களில் வரும் சிறிய வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக வழக்குகளை கையாள முடியும். உங்கள் கருத்து என்ன?