News December 20, 2024
பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் குழு அமைக்க உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க “உள்ளக புகார் குழு” அமைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். குழுவில் தலைமை அலுவலர், மூத்த பெண் அலுவலர் உள்ளிட்டோர் இருப்பார்கள். www.shebox.nic.in மூலம் புகார்களை பதிவு செய்யலாம். அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News March 18, 2026
தி.மலை: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News March 18, 2026
தி.மலை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 18, 2026
தி.மலை: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


