News December 20, 2024
இரட்டை இலைச் சின்னம்… கலக்கத்தில் அதிமுக மேலிடம்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருப்பது தெரிந்ததே. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், இந்த வழக்கு பூதாகரமாக மாறலாம். கடந்த இடைத்தேர்தலின்போது, பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. இதன் காரணமாக EPS – OPS இடையே மோதல் முற்றாமல் இருந்தது. தற்போது நிலைமை அப்படியில்லை என்பதால், அதிமுக மேலிடம் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News July 5, 2025
5 வருஷத்தில் 785 கணவர்கள் கொலை: ஷாக்கிங் ரிப்போர்ட்

ஹனிமூனில் கொல்வது, கண்களில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் காலை வைத்து மிதித்து கொள்வது என மனைவிகள் கணவர்களை கொல்லும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. இதில் ஷாக்கிங் தகவல் என்னவென்றால், உ.பி., பிஹார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ம.பி.,யில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் இப்படி 785 கணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என NCRB டேட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு கொலைகள்?
News July 5, 2025
FLASH: விஜய்க்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்

திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக தேர்தல் பரப்புரை <<16950638>>லோகோவை வெளியிட்டு<<>> பேசிய அவர், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். விஜய் குறித்த கேள்விக்கு, திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் தங்களுடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா?
News July 5, 2025
மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: சிராஜ்

பும்ரா இல்லாததால் பவுலிங்கில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளை அவர் அதிரடியாக வீழ்த்தினார். இதனையடுத்து பேசிய அவர், ஆகாஷ் தீப் & பிரசித் ஆகியோர் ஒருசில டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளதால், பவுலிங்கில் பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இப்படியான பொறுப்புகள் தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.