News December 20, 2024
எல்லாமே ஏறுது… ஆனால்?

பெட்ரோல், கேஸ் விலை தொடங்கி மளிகை, காய்கறிகள், எலக்ட்ரானிக்ஸ், பால், போன் என வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையும் அதிவேகத்தில் உயர்கின்றன. ஏன், அரசாங்கம் விதிக்கும் வரிகளும்தான். ஆனால், சாதாரண மக்களின் வருமானமோ உயரவே இல்லை. மாறாக இன்னும் குறைந்து வருகிறது. விலையேற்றத்துக்கு காரணம் சொல்லும் அரசுகள், மக்களின் வருமானம் உயராததற்கு காரணம் சொல்வதில்லையே ஏன்?
Similar News
News July 5, 2025
மயக்கமடைந்த ஏர் இந்தியா பைலட்: பதறிய பயணிகள்!

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா- AI2414 விமானத்தின் பைலட் திடீரென மயக்கமடைந்ததால், பதற்றம் ஏற்பட்டது. பைலட் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். பைலட் இல்லாததையடுத்து Co-pilot விமானத்தை இயக்கினார். இந்த பதற்றத்தின் காரணமாக, விமானம் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
News July 5, 2025
பரிதாபமான நிலையில் திமுக: இபிஎஸ்

வீடு வீடாக போய் உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு திமுக பரிதாபமான நிலைக்கு போய்விட்டது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு கட்சியில் சேர வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், திமுகவில் சேருங்கள் என வீடு வீடாக போய் கேட்கும் அளவுக்கு திமுக வந்துவிட்டது. இதுவே அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி தான் என்று தெரிவித்தார்.
News July 5, 2025
இந்த வார்த்தையை உங்களால் கூற முடியவில்லையா?

‘ஊருக்கு போனா அங்கேயே இருந்திடலாம் போல இருக்கு’ என வெளியூர்களில் இருக்கும் சிலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த வார்த்தைகளைக் கூட கூற முடியாமல் பலர் உள்ளனர். இதற்கு கடன், பண நெருக்கடி, ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் என காரணங்கள் இருக்கலாம். ஆனால், துயரங்கள் உங்களை சூழ்ந்தாலும் மனதில் சிறு புன்னகையை எப்போதும் வைத்திருங்கள். வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழுங்கள்.