News December 20, 2024

அந்த குறையை BCCI தீர்க்குமா?

image

அஸ்வினுக்கு பிரிவு உபச்சாரப் போட்டியை BCCI ஏற்பாடு செய்ய வேண்டுமென, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார். 130 கோடி மக்களின் முகத்தில் வெற்றி புன்னகையை ஒளிர செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பங்களித்த சேவாக், VVS லக்ஷ்மண், தோனி, கம்பீர், ஜாகீர் போன்ற சிறந்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்றபோது, BCCI முறையாக பிரிவு உபச்சாரம் செய்ததில்லை. அந்த குறையை BCCI வருங்காலத்திலாவது தீர்க்குமா?

Similar News

News March 11, 2026

கண்ணாயிரம் அந்த சமையல் Weapons எடு..

image

இன்றைய தலைமுறை தம்பதிகள் பலரிடம், ஏனோ வீட்டில் சமைக்கும் ஆர்வம் சற்று குறைவாகவே உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அவர்கள் தற்போது, ஹோட்டல்கள் மூடப்படுவதால் வீட்டில் சமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சோதனைக் காலமாக தம்பதிகள் கருதினாலும், ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டதால் இம்மாதம் ஆயிரக்கணக்கில் மிச்சமாகும் என வீட்டுப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

News March 11, 2026

CINEMA 360°: ஒரே படத்தில் இணையும் ரஜினி – ஷாருக்

image

*சாய் பல்லவியின் ‘ஏக் தின்’ பாலிவுட் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது. *ஆந்திரா DCM பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *சமுத்திரக்கனி, GVM நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் ’ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

மார்ச் 11: வரலாற்றில் இன்று

image

*1983 – பாகிஸ்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது. *1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. *1927 – இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் வி. சாந்தா பிறந்த தினம். *1992 – நடிகை மஞ்சிமா மோகன் பிறந்த தினம். *2013 – தமிழறிஞர் வே. தில்லைநாயகம் நினைவு தினம்.

error: Content is protected !!