News December 20, 2024
நீதிமன்ற கொலையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்

நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை மாயாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் பாதுகாப்பு இருந்தும் கொலை நடந்தது எப்படி என வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதிலை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News March 3, 2026
நெல்லை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது – மாரிசெல்வராஜ்

நாங்குநேரியில் நேற்று இரவு சாமானிய மக்கள் மீது சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும், சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
BIG BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; 7 பேர் கைது..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடம்போடுவாழ்வு மற்றும் பெரும்பத்து பகுதிகளில் நேற்று இரவு போதை கும்பல் நடத்திய அரிவாள் வீச்சில் இருவர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


