News December 20, 2024
6-8 வகுப்பு: மழை பாதித்த மாவட்டங்களில் நாளைத் தேர்வு

பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 12ஆம் தேதி நடைபெறவிருந்த 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் அங்கு நாளை மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News March 7, 2026
SPORTS 360°: பேட்மிண்டனில் லக்ஷயா சென் அபாரம்

*ISL கால்பந்தில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது *PRAGUE செஸ் மாஸ்டர்ஸில் அரவிந்த் சிதம்பரம் 3-வது இடம் பிடித்தார் *வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
News March 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
News March 7, 2026
திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: பா.ரஞ்சித்

நாங்குநேரியிலும், சிவகங்கை இடைக்காட்டூரிலும் நடந்த சாதிவெறி தாக்குதல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். தனது X பதிவில், கடந்த 6 ஆண்டுகளில் நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, இப்பிரச்னைகளை எதிர்கொள்வதில் திமுக அரசும், போலீசும் தோல்வி அடைந்திருப்பதாக அவர் சாடியுள்ளார். எனவே, TN-ல் சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.


