News December 20, 2024

அடுத்து வெங்கட் பிரபுவுடன் இணைகிறாரா அஜித்?

image

சிவா இயக்கத்தில் 5வது முறையாக அஜித் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவர் இயக்கிய ‘கங்குவா’ படம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே மீண்டும் அஜித்தை சந்தித்து வெங்கட் பிரபு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். இதன் காரணமாக இருவரில் யாருடைய இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Similar News

News July 5, 2025

பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

image

உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து இந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP

News July 5, 2025

தனுஷ் படத்தில் இணையும் பூஜா ஹெக்டே

image

‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் அவர் நடித்துள்ளார். மேலும் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு, ‘காஞ்சனா 4’ படத்திலும் பூஜா நடித்து வருகிறார். இறுதியாக, ‘ரெட்ரோ’ படத்தில் நடித்திருந்தார்.

News July 5, 2025

அஜித் உயிருக்கு ₹5 லட்சம் தான் மதிப்பா? சீமான் ஆதங்கம்

image

அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு வரும் 8-ம் தேதி நாதக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் கொடுக்கும் அரசு, காவலர்கள் அடித்து கொன்றால் ₹5 லட்சம் தான் தருகிறது என விமர்சித்த அவர் அவ்வளவு தான் உயிருக்கு மதிப்பா? என கேள்வி எழுப்பினார். மேலும், நிகிதா கைது செய்யப்படும்வரை தொடர்ந்து போராடுவேன் எனறும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!