News December 20, 2024

TNPSC குரூப்-2 தேர்வில் மீண்டும் மாற்றம்

image

<>TNPSC<<>> குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் OMR முறையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் மெயின்ஸ் முதல் தாள், பிப்ரவரி 23ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 2,540‬ காலிப்பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 29,000 பேர் எழுதவுள்ளனர்.

Similar News

News March 8, 2026

நாகை: திமுகவில் இணைந்த அதிமுக-வினர்

image

நாகை மாவட்டம், குறிச்சி ஊராட்சி ஆய்மலை கிராமத்தில் அதிமுக முன்னாள் கிளைக் செயலாளர் பிரசாத் தலைமையில், அக்கட்சியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் விலகி திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன் தலைமையில் திமுக-வில் நேற்று இணைந்தனர். இதையடுத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News March 8, 2026

TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

image

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.

News March 8, 2026

விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

image

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

error: Content is protected !!