News March 24, 2024
நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ஈரோட்டில் மருத்துவர் மு.கார்மேகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

டிஜிட்டல் கைது” என்பது சட்டப்பூர்வமான ஒன்று அல்ல, இது ஒரு வகையான ஆன்லைன் மோசடியாகும். இதில், மோசடி செய்பவர்கள் காவல்துறை அல்லது சிபிஐ போன்ற அதிகாரிகளைப் போல நடித்து, போலி ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி அவர்களிடம் பணத்தை பறிக்கிறார்கள் என தெரிந்தால் சைபர் க்ரைம் எண்-1930 தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர் செய்தனர்.
News December 7, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
News December 7, 2025
ஈரோடு: பள்ளியில் 14,967 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

ஈரோடு மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200 வரை.
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 11.12.2025.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
இத்தகவலை SHARE பண்ணுங்க!


