News December 20, 2024
புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

WI அணிக்கு எதிரான கடைசி ODI போட்டியில் 77 ரன்கள் எடுத்ததன் மூலம், இருதரப்பு டி20 தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், மந்தனா
193 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக, 2018இல் SA அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் மிதாலி ராஜ் 192 ரன்களை எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
Similar News
News March 6, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $88 (இந்திய மதிப்பில் ₹8,077) குறைந்து $5,089.47-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 குறைந்து $83.04-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
திமுகவிடம் DCM பதவி கேட்டாரா பிரேமலதா?

தேமுதிகவுக்கு DCM பதவி வேண்டும் என திமுகவிடம் பிரேமலதா கேட்டதாகவும், இதனால்தான் கூட்டணி தாமதமானது எனவும் சமீபகாலமாக தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா விளக்கமும் அளித்திருக்கிறார். தாங்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாரிடமும் அடம் பிடித்தது கிடையாது எனவும், மற்ற கட்சிகளை போலவே தங்களுக்கான உரிய இடத்தை தாங்கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
News March 6, 2026
கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் அஞ்சினார்: TTV

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என TTV தெரிவித்துள்ளார். திமுக-காங்., கூட்டணியில் அடித்துக் கொண்டு தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்தது போல் NDA கூட்டணியில் நடக்காது; சுமுகமாகவே பேச்சுவார்த்தை முடியும் எனக் கூறினார். மேலும், தவெகவுடன் காங்., சென்றுவிடுமோ என அச்சத்தில் இருந்த ஸ்டாலின் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு சமிக்ஞை காட்டி நிம்மதியை வெளிப்படுத்தியதாகவும் பேசினார்.


