News December 20, 2024

₹299-க்கு ₹10,00,000 இன்ஷூரன்ஸ்

image

குறைந்த பிரீமியம் தொகையுடன் ₹10 லட்சத்துக்கான ‘குழு தனிநபர் விபத்து இன்ஷூரன்ஸ் பாலிசி’ திட்டத்தை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வழங்கி வருகிறது. இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ஆண்டுக்கு ₹299 பிரீமியம் செலுத்தினால் விபத்தின் போது மரணம், உடல் ஊனம் அல்லது செயலிழப்பு ஏற்பட்டால் ₹10 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்கும். 18-65 வயதினர் இதற்கு அப்ளை செய்யலாம். இதற்கு நிபந்தனைகளும் உண்டு.

Similar News

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுங்க: EPS

image

உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய அரசை EPS வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மக்களிடையே தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, TN-ல் உணவகங்கள் இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள், சலுகைகளை மாநில அரசு செய்து தரவும் வலியுறுத்தினார். மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயங்க வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 10, 2026

❤️ 64 அபார்ட்மெண்ட்களை கொடுத்து உதவிய தொழிலதிபர்

image

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்களை ஒதுக்கியுள்ளார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

News March 10, 2026

OPS தனது முடிவை மாற்றினார்.. மீண்டும் ஜெயலலிதா போட்டோ!

image

OPS, திமுகவில் இணைந்தவுடன் வீட்டிலிருந்து அகற்றிய ஜெயலலிதாவின் போட்டோவை மீண்டும் வைத்துள்ளார். OPS, திமுகவில் இணைந்ததால் அப்செட்டில் உள்ள இளைய மகன் ஜெயபிரதீப், OPS-யிடம் பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், உடனடியாக ஜெயலலிதாவின் போட்டோவை அகற்றியது இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதனால், OPS தனது முடிவை மாற்றி ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைத்துள்ளார்.

error: Content is protected !!