News December 20, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி நாளை (21.12.2024) சனிக்கிழமை, கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதுஇதில் தகுதி பெறும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகரில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <
News November 12, 2025
கடலூர்: தவறி விழுந்து பேருந்து ஓட்டுநர் பலி

சங்கிலி குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று இரவு ராமாபுரம் பைபாஸ் சாலை வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் உடலை கைப்பற்றிய முதுநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 12, 2025
கடலூர்: பட்டப் பகலில் கொள்ளை

திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டி தெருவில் பூக்கடை செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் இல்லத்தில் மர்ம நபர் ஒருவர் பட்டப் பகலில் வீட்டு லாக்கர் உடைத்து வெள்ளி மற்றும் தங்க நகைகள் பித்தளை பாத்திரங்கள் மற்றும் வெள்ளி விளக்கு போன்ற பொருட்கள் திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


