News December 20, 2024

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? மத்திய அரசு விளக்கம்

image

நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், அதுபோன்ற உத்தரவு எதையும் மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News September 3, 2025

3-ம் உலகப்போர்? ஆர்டர் போட்ட ஃபிரான்ஸ்

image

போர் சூழலுக்கு ஏற்றவாறு 2026-க்குள் தயாராகும்படி ஹாஸ்பிடல்களுக்கு ஃபிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – NATO நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 10 -180 நாள்களுக்குள் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – NATO நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், அது 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News September 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News September 3, 2025

ஏலத்தில் இந்த வீரரை CSK வாங்கும்: அஸ்வின்

image

2026 ஐபிஎல் ஏலத்தில் CSK அணி டிம் சீஃபர்ட்டை வாங்கும் என அஸ்வின் கணித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் அவர், CSK அணியில் கான்வே அல்லது ரச்சின் தொடரவில்லை என்றால் தொடக்க வீரராக டிம் சீஃபர்ட்டை ஏலத்தில் வாங்க கூடும் என்றார். ஒரு வேளை CSK அவரை வாங்க தவறினால், வேறு அணிகள் அவரை நிச்சயம் வாங்க கூடும் என அஸ்வின் தெரிவித்தார். டிம் சீஃபர்ட் சமீபத்தில் CPL-ல் 53 பந்தில் 125 ரன்கள் குவித்திருந்தார்.

error: Content is protected !!