News December 20, 2024
ONOE மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவிற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் முன்மொழிந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் கூச்சல் எழுப்பிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
Similar News
News September 3, 2025
ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து 7-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
News September 3, 2025
TNPSC வினாத்தாளில் தவறு: நயினார் ஆவேசம்

ஐயா வைகுண்டரை பற்றி TNPSC வினாத்தாளில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐயா வைகுண்டரை ‘முடிசூடும் பெருமாள்’ என மக்கள் அழைக்கும் நிலையில், மொழிப்பெயர்ப்பில் அவரது பெயர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தன் தந்தை குறித்து இதேபோல் தவறாக குறிப்பிட்டால் CM பேசாமல் இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
News September 3, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤மணத்தக்காளி பழங்களை உலர வைத்து வற்றலாக சாப்பிட்டால், காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
➤மணத்தக்காளி இலைச் சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும்.
➤மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவை நீங்கும். SHARE IT.