News December 20, 2024
ஜனவரி 6இல் சட்டப்பேரவை கூடுகிறது!

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தில் முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்த ஆளுநர், இந்த முறையாவது அரசின் உரையை முழுமையாக படிப்பார் என நம்புவதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
Similar News
News September 17, 2025
ஜப்பானில் சிக்கிய போலி பாக்., கால்பந்து அணி

பாக்.,ஐ சேர்ந்த 22 பேர் அடங்கிய போலி கால்பந்து குழு ஜப்பானில் கொத்தாக சிக்கியுள்ளனர். ‘Golden Football Trial’ என்ற டீம் பெயருடன், 22 பேரும் கால்பந்து வீரர்கள் போல் நடித்து போலியாக கொடுத்த ஆவணத்தின் பின்னணியில், இது மோசடியானது என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாலிக் வகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக, பாக்.,ன் FIA விசாரணைக்குழு கூறியுள்ளது.
News September 17, 2025
ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் மனு

தன்னை பற்றி ஜாய் கிரிஸில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை நீக்க கோரியும், அவதூறு கருத்துகளை கூற தடை விதிக்க வலியுறுத்தியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை HC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல், இவர் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு PVT Ltd நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி ஜாய் பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாள்களில் ₹12.5 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
News September 17, 2025
யூடியூபில் போலி செய்திகளை தடுக்க லைசன்ஸ் முறை

யூடியூப்பில் வலம்வரும் செய்தி சேனல்களில் பல போலி செய்திகள் வெளியிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில், TV சேனல்களை போல யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் லைசன்ஸ் பெறுவதை கட்டாயமாக்கும் திட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் இதுபோன்ற விதிமுறை தேவையா? Comment பண்ணுங்க.