News December 20, 2024
விருதுநகர் புதிய துணைகாவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பவித்ரா வேடசத்திரத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய யோகேஷ் குமார் விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய துணை காவல் கண்காணிப்பாளராக யோகேஷ் குமார் நேற்று(டிச.19) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Similar News
News March 7, 2026
விருதுநகர்: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.71 கோடி வரவு!

விருதுநகர் மாவட்டத்தில் 3,560 விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.71 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விருதுநகர் மண்டலத்தில் 2025-26 காலகட்டத்தில் 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடந்த 4-ம் தேதி வரை 29,796 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.71,01,20,229 வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்
News March 7, 2026
கூமாப்பட்டி: திருமண வீட்டில் தகராறு; பீர் பாட்டிலால் தாக்குதல்

கூமாப்பட்டி ஆத்தங்கரைபட்டியை சேர்ந்தவர் சாமி(19). இவர் அங்கு நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று பந்தியில் அமர்ந்து சாப்பிட்ட போது, அருகே அமர்ந்து சாப்பிட்ட இருளப்பன், ரஞ்சித் ஆகியோர் சாமி இலையில் தண்ணீர் பாட்டிலை தள்ளி விட்டுள்ளனர். இதை கேட்ட சாமியை, இருளப்பன் பீர் பாட்டிலால் தாக்கி உள்ளார். ரஞ்சித் கல்லால் எறிந்ததில் பாப்பாத்தி(70)என்ற மூதாட்டி காயமடைந்தார். கூமாப்பட்டி போலீசார் விசாரணை.
News March 6, 2026
விருதுநகரில் 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 29 சப்- இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரபிரப்பித்துள்ளார். அதன்படி விருதுநகர் மேற்கு, மாரனேரி, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சாத்தூர் தாலுகா, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், வன்னியம்பட்டி, கீழபரளச்சி உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


