News December 20, 2024

ராமேசுவரம் – ஹூப்ளி ரயில் சிவகங்கையில் நிற்கும் 

image

ராமேசுவரம் – ஹூப்ளி – ராமேசுவரம் சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News March 6, 2026

சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; 4 போலீசாரை கைது செய்ய தடை.!

image

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், SI சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்ததால், 12 ம் தேதி வரை 4 பேரும் கைதிலிருந்து தப்பியுள்ளனர். மீண்டும் மார்ச்.16 ல் வழக்கு விசாரிக்கப்படும்.

News March 5, 2026

சிவகங்கை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

சிவகங்கை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 5, 2026

சிவகங்கை : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!