News December 20, 2024
தங்கம் விலை ₹1,960 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 10 நாள்களில் சவரனுக்கு ₹1,960 குறைந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹58,280க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அது ₹56,320ஆக குறைந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹880 குறைந்திருக்கிறது. வெள்ளியின் விலை நேற்றை விட கிராமுக்கு ₹1 குறைந்து ₹98க்கு விற்பனையாகிறது.
Similar News
News July 6, 2025
விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ ₹35

தக்காளி விலை மீண்டும் குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹15 குறைந்து ₹35-க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியிலும், நகரவாசிகள் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். தற்போது மீண்டும் சரிவைக் கண்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News July 6, 2025
2026-ல் திமுகவுக்கு இருக்கும் சாதகம்

2026 தேர்தலில் மும்முனை தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், 10 மாதங்களுக்கு முன்னரே திமுக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளது. பாஜக எதிர்ப்பை முன்னிலைப்படுத்தியும், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் & புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறியும் வாக்கு சேகரிக்கின்றனர். இது திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
News July 6, 2025
பிற்பகல் 12 மணி வரை முக்கிய செய்திகள்!

★<<16962233>>பாஜகவுடன் <<>>கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு குறையலாம் என Ex MP அன்வர் ராஜா பேச்சு. ★<<16962592>>சாத்தூரில் <<>>ஒரே வாரத்தில் 2-வது வெடிவிபத்து ★<<16960828>>பிரிக்ஸ் <<>>உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரேசில் சென்றடைந்தார் PM மோடி. ★டிரம்புக்கு எதிராக புதிய கட்சியை தொடங்கிய <<16960233>>எலான் <<>>மஸ்க். ★இந்திய பெண்கள் <<16962725>>கால்பந்து<<>> அணி வரலாற்று சாதனை.