News December 20, 2024
திருச்சியில் கலைஞர் நூலக கட்டுமான பணிக்கு டெண்டர்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை அமைக்க ரூ.175 கோடியில் கட்டுமான பணி மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அரசாணை வெளியான வெறும் இரண்டே நாட்களில் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்.
Similar News
News March 4, 2026
திருச்சி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
திருச்சி: லஞ்சம் பெற்ற மின் உதவி பொறியாளர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து ரூ.5000 இலவச மின் விநியோகம் பெறுவதற்கு கையூட்டு பெறும்போது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
News March 4, 2026
ஹிந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் கர்தவ்ய த்வார் என எழுதி உள்ளனர். இதனை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.


