News December 20, 2024

தேனியில் இன்று எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(டிச.20) மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமையில் சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள், முகவா்கள் பங்கேற்கின்றனா். இதில் பொதுமக்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

தேனி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

தேனி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். ஷேர் செய்யுங்கள்

News March 4, 2026

தேனி: பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு.!

image

மதுரையை சேர்ந்தவர் காஜாஉசேன் (80). இவர் சில தினங்களுக்கு முன்பு உத்தமபாளையத்தில் உள்ள அவரை நண்பரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த காஜாஉசேன் மீது சுப்பிரமணி என்பவர் பைக்கை ஓட்டி வந்து மோதி உள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

News March 4, 2026

தேனி: வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருட்டு

image

பெரியகுளம், வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!