News December 20, 2024

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

திருந்திய நெல் சாகுபடி முறையில் மாநில அளவில் அதிகமாக மகசூல் பெறும் விவசாயிக்கு ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.7000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலேயே அல்லது தபாலையோ அனுப்பி அதற்கான ஒப்புதலை பெற வேண்டும் என நேற்று(டிச.19) நெல்லை மாவட்ட வேளாண்மை இயக்குனர் தெரிவித்தார்.

Similar News

News March 3, 2026

BREAKING: நாங்குநேரி இரட்டை கொலையில் அதிர்ச்சி தகவல்..!

image

நாங்குநேரியில் நேற்று இரவு இரண்டு பேர் கொலை செய்யபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் 2023ம் ஆண்டு மாணவர் சின்ன துரையை தாக்கிய வழக்கில் கைதான சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர் தற்போது நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

News March 3, 2026

நெல்லை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது – மாரிசெல்வராஜ்

image

நாங்குநேரியில் நேற்று இரவு சாமானிய மக்கள் மீது சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும், சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!