News December 20, 2024

சுவாமி சிலைகள் உடைப்பு

image

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சிங்காரவேல்.அப்பகுதியில் சாய் பாப கோயிலை 6 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். நேற்று காலை கோயிலை திறந்தபோது ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரமுள்ள முருகன்,லட்சுமி சிவன் சிலைகள் உடைந்து கிடந்தன. எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உடைந்ததா அல்லது யாராவது சிலைகளை கிழே தள்ளி விட்டார்களாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

மதுரை மாவட்டத்தில் 33,958 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

image

மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை 33,957 மாணவ, மாணவிகள் எழுதினா். எஞ்சியுள்ள 546 போ் தோ்வை எழுதவில்லை. இதேபோல, 836 தனித்தோ்வா்களும் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில், 761 போ் எழுதினா்; எஞ்சிய 75 போ் தோ்வை எழுதவில்லை.

News March 3, 2026

மதுரை: பள்ளி மாணவி தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்ததனால் விரக்தி அடைந்த மாணவி சரிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாணவர்கள் தற்கொலை குறித்த எண்ணம் வந்தால் 104ஐ அழைக்கவும்; தற்கொலை தீர்வல்ல.!)

News March 3, 2026

மதுரை: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

image

மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த மஞ்சுளா(45), தனியார் டிரைவிங் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் தெற்குவாசலை சேர்ந்த கேசவன்(30) ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மஞ்சுளா பணத்தை திருப்பி கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கேசவன், வீட்டிற்கு சென்று தோசைக்கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!