News March 24, 2024
புதுச்சேரி: நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, புதுச்சேரியில் மருத்துவர் ரா.மேனகா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 15, 2025
புதுவை: 1.8 கிலோ குட்கா பறிமுதல்-ஒருவர் கைது

வீராம்பட்டினம் அருகே பெட்டிக்கடையில், குட்கா மற்றும் சிகரெட்கள் விற்பனை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று, பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் 1.8 கிலோ குட்கா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிந்து, பவானி நகரை சேர்ந்த குமரகுரு, என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News November 15, 2025
புதுச்சேரி: ஹைதராபாத் விமானம் ரத்து

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 78 பயணிகளுடன் ஹைதராபாத் புறப்பட நேற்று விமானம் ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை கேப்டன் மணிஷ் காஜ்பீயி கண்டறிந்தார். இதையடுத்து விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
News November 15, 2025
காரைக்காலில் வாக்காளர் உதவி மையம் அமைப்பு

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 2026 நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான விவரங்களை பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-யை பயன்படுத்தியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


