News December 20, 2024
திருவள்ளூரில் விடிய விடிய மழை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், திருத்தணி, சோழவரம், கவரைப்பேட்டை, ஆரணி, கொசவன்பேட்டை, மேட்டுப்பாளையம், சிறுவாபுரி, மெய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில்?
Similar News
News March 4, 2026
கும்மிடிப்பூண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(26). தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று(மார்ச் 3) கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறிய பிரசாந்த், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 4, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
திருவள்ளூர்: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


