News December 20, 2024
மோதல் போக்கு தேவையற்றது: அன்புமணி

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு-ஆளுநர் இடையிலான மோதல் போக்கு நீடிப்பது தேவையற்ற ஒன்று என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு TN அரசுக்கு யோசனை தெரிவித்த அவர், அதன்மூலம் உடனடியாக ஒரு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 2, 2025
Beauty Tip: பொடுகு தொல்லையா? ஈசி தீர்வு இருக்கு

தற்போது மழைக்காலம் என்பதால் பொடுகு தொல்லையை பற்றி கூறவேண்டிய அவசியமே இல்லை. இதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். கவலை வேண்டாம். இதனை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும் என்கின்றனர். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. SHARE.
News September 2, 2025
தமிழ் நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்

பிரபல தமிழ் நடிகர் குரியகோஸ் ரங்கா இன்று காலமானார். நடிகர் விசுவின் மைத்துனரான இவர், அவள் சுமங்கலிதான், மணல் கயிறு, நாலு பேருக்கு நன்றி, ஊருக்கு உபதேசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிர் பிரிந்தது. குரியகோஸ் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News September 2, 2025
364 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: CM ஸ்டாலின்

திமுக அரசு சொன்னதையும் செய்திருக்கிறது, சொல்லாததையும் செய்திருக்கிறது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த 505 வாக்குறுதிகளில் திமுக அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சொல்லாத காலை உணவு திட்டம், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற முத்திரை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.