News December 20, 2024
சச்சினுக்கு நிகரானவர் அவர்: கபில்தேவ்

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின் என Ex கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார். இந்தியாவின் மகத்தான ஒருவர் விடைபெற முடிவெடுத்ததை பார்த்து ஆச்சரியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அஸ்வின் முகத்தில் வலியை பார்த்தது சோகமாக இருந்தது என்றார். மேலும், அஸ்வின் ஓய்வை அறிவிக்கும்போது நான் அங்கு இருந்திருந்தால், அவரை மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும் அனுப்பியிருப்பேன் என தனது நிலைப்பாட்டை அவர் கூறினார்.
Similar News
News July 6, 2025
430 ரன்கள்: டீம் ஸ்கோர் இல்லை, கில் ஸ்கோர்..!

இந்தியா – இங்கி., இடையே 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 430 ரன்கள் அடித்துள்ளார். SENA நாடுகளுக்கு சென்று ஒரு ஆசிய கேப்டன் ஒரே போட்டியில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுதான் முதல்முறை. மேலும் இந்தியாவுக்காக ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவரும் தற்போது இவர் தான். கவாஸ்கர்(344), விவிஎஸ் லக்ஷம்ன்(340), சவுரவ் கங்குலி (330) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
News July 6, 2025
டிரம்புக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய பியுஷ் கோயல், இருதரப்புக்கும் பயனளிக்க கூடியதாகவும், வெற்றியளிக்கூடியதாக ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளதக்க ஒப்பந்தமாகும் இருக்குமென்றார். இதற்கு X பக்கத்தில் பதிலளித்த ராகுல், டிரம்பின் வரி காலக்கெடுவுக்கு மோடி பணிவுடன் தலைவணங்குவார் என விமர்சித்துள்ளார்.
News July 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 6 – ஆனி – 22 ▶ கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: ஏகாதசி▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.