News December 19, 2024
மேலும் ஒரு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

அவதூறு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக அரசின் தூய்மை பணியாளர் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கஞ்சா வழக்கில் வாரண்ட் அடிப்படையில் கைதான அவர், தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News March 3, 2026
BREAKING: கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

காங்., கேட்கும் கூடுதல் தொகுதிகளை அளிக்க திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், இன்று நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தைக்குபின் கூட்டணியிலிருந்து காங்., வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., வெளியேறும்பட்சத்தில் காலியாகவுள்ள 4 ராஜ்யசபா இடங்களில் தேமுதிகவிற்கு ஒன்று, மீதமுள்ள 3 -ல் திமுகவே களமிறங்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களையும் இன்று மாலை திமுக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 3) குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹10 குறைந்து ₹15,650 -க்கும், 1 சவரன் ₹80 குறைந்து ₹1,25,200-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,000 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
News March 3, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக EPS தெரிவித்துள்ளார். மேலும் அவர், சசிகலாவின் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருவது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தற்போதைய அரசியல் சூழல், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.


