News December 19, 2024

கேரள கழிவுகள்: மத்திய வாரியத்துக்கு TN கடிதம்

image

கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்படும் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், நெல்லையில் உள்ள 4 கிராமங்களில் கொட்டப்படுகின்றன. மிக ஆபத்தான இக்கழிவுகளை கொட்ட எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதைத் தடுக்கக் கோரியும், அதற்கான நடவடிக்கை எடுக்க கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட கோரியும், மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு, TN மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

Similar News

News March 20, 2026

NDA கூட்டணிக்கு ஆதரவு

image

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு சிறு கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் நயினாரை நேரில் சந்தித்து NDA கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர். அத்துடன், 234 தொகுதிகளிலும் NDA கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.

News March 20, 2026

இந்த சீசனில் 3,000 ரன்களை அடிக்க விரும்புகிறேன்.. வைபவ்

image

வரும் IPL தொடரில் 2,000 முதல் 3,000 ரன்களை அடிப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி நகைச்சுவையாக கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சீசனில் உங்களின் ரன் டார்கெட் என்ன என கேட்டதற்கு, வைபவ் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், தனிப்பட்ட சாதனைகள் முக்கியம் அல்ல, கோப்பையை வெல்வதே லட்சியம் எனவும் பேசியுள்ளார். இந்த சீசனில் வைபவ் எவ்வளவு ரன்கள் அடிப்பார் என நினைக்கிறீங்க?

News March 20, 2026

CINEMA 360: சிறை இயக்குநரை லாக் பண்ணும் தனுஷ்!

image

‘சிறை’ இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது *தேர்தல் காரணமாக ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் *நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்ட தான், தற்போது சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளதாக ரஷ்மிகா கூறியுள்ளார். தெலங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் விழாவில் ‘கேர்ள் பிரெண்ட்’ படத்திற்காக அவர் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.

error: Content is protected !!