News March 24, 2024

“நாளை முதல் விடுமுறை”

image

நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் +1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வுமுடிவுகள் மே 14-ல் வெளியிடப்படும்.

Similar News

News October 25, 2025

கீறல் விழுந்த பான்களை வீட்டில் பயன்படுத்துறீங்களா?

image

நான்ஸ்டிக் டெஃப்லாண் பான்களின்(Non-stick Teflon pans) பயன்பாடு அதிகரித்துள்ளது. அவற்றில் கீறல்கள் விழுந்தாலும் தொடர்ந்து பயன்படுத்துகின்றோம். ஆனால், ஒரு கீறல் மூலமே 9,000-க்கும் மேற்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியாவதாகவும், முழுவதுமாக சேதமடைந்தால், 2.3 மில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளிப்படும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. ALERT!

News October 25, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

image

நடிகை மனோரமாவின் ஒரே மகனும் நடிகருமான பூபதி(70) சென்னையில் நேற்று காலமானார். அம்மா பயன்படுத்திய கட்டிலிலேயே அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகம். தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பூபதி உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி பல படங்களில் நடித்திருந்தார். RIP

News October 25, 2025

செல்வப்பெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர்

image

செம்பரம்பாக்கம் ஏரியை அத்தொகுதியின் MLA ஆன தன்னிடம் சொல்லாமல் திறந்ததற்காக நீர்வளத்துறை அதிகாரிகளை <<18077962>>செல்வப்பெருந்தகை<<>> சாடினார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை போன்ற கட்சி தலைவர்கள் கடுமையான பேசியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் எனவும், சின்ன சின்ன நீர் திறப்புகளுக்கு எல்லாம் MLA-வை கூப்பிடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!