News December 19, 2024
கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்

Oppenheimer, Interstellar உள்ளிட்ட கிளாசிக் படங்களை கொடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன். திரைத்துறையில் நோலனின் அளப்பரிய பங்களிப்பை கெளரவிக்கும்வகையில் பிரிட்டிஷ் மன்னர் 3-ஆம் சார்லஸ் ‘சர்’ பட்டம் கொடுத்துள்ளார். இந்த விழாவில் நோலனின் மனைவி எம்மா தாமஸுக்கு சர் பட்டத்துக்கு இணையான டேம் (சீமாட்டி) பட்டம் கொடுக்கப்பட்டது. நோலனின் பெயரிடப்படாத அடுத்த படம் 2026 ஜூலையில் வெளியாகவுள்ளது.
Similar News
News March 10, 2026
சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்ட செடி!

சர்க்கரை சாப்பிட ஆசை இருந்தும், நீரிழிவு நோய் வந்துவிடும் என் பயமா? இச்செய்தி உங்களுக்கே! பேக்டரிகளில் தயாரிக்கப்படும் சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசி (Stevia) செடி உள்ளது. சர்க்கரையை விட 150- 300 மடங்கு இனிப்பு கொண்ட இதன் இலைகளில் கலோரிகளும் குறைவாம். பிரேசில், உருகுவே நாடுகளில் தோன்றிய இச்செடியை, சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட அளவிற்கு உட்கொள்ளலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
News March 10, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 10, 2026
திமுக கலக்கத்தில் உள்ளது: PM மோடி

NDA-வுக்கு TN மக்களிடம் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுக கலக்கத்தில் உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாளை திருச்சியில் நடக்கும் NDA மாநாட்டில் பங்கேற்பது பற்றி X-ல் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவின் மோசமான நிர்வாகம், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே NDA-வின் வளர்ச்சி கொள்கையுடன் மக்கள் தங்களை இணைத்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


