News December 19, 2024
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் விபத்து- எம்.எல்.ஏ. ஆய்வு

சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரிகளைத் தேக்கும் பங்கர் டேங்க் திடீரென சரிந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டு, பணிகளைத் துரிதப்படுத்தினார்.
Similar News
News March 5, 2026
எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து இவர் போட்டியா?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் தடகள வீராங்கனை அத்யா சதாசிவம் விருப்பமனு அளித்துள்ளார். விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்த இவர், தற்போது மக்கள் சேவைக்காகத் தேர்தல் அரசியலில் களம் இறங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஈபிஎஸ்-ஸின் சொந்தத் தொகுதியில் ஒரு வீராங்கனை விருப்பமனு அளித்திருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
சேலம்: காதலன் கைவிட்டதால் இளம் பெண் விபரீதம்!

ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோபிகா. இவர் 5 ஆண்டுகளாக இளம்பிள்ளையை சேர்ந்த கார்த்திகேன் (25) என்பரை காலலித்து வந்துள்ளார். இதன் பின்னர் திருமணம் செய்ய கார்த்திகேன் மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார். இது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,காதலன் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News March 5, 2026
சேலம் கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!

2026-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 11 ரெகுலர் தாசில்தார்கள் உட்பட 45 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிருந்தாதேவி பிறப்பித்துள்ளார். இதில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளின் தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், ஊரக வளர்ச்சித் துறையில் 210 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இருவருக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.


