News December 19, 2024
ராமநாதபுரம் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை ரத்து

தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வரும் சிறப்பு ரயில் (வ.எண் : 06103) டிசம்பர் 26, 28 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வ.எண் : 06104) டிசம்பர் 27, 29 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதற்கு ஏற்ப பயண திட்டத்தை வகுத்து கொள்ளவும்.
Similar News
News March 8, 2026
இராமநாதபுரம்: காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள்?

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் மாவட்டத்தில் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு MLA ராம.கருமாணிக்கம், மாநில செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை தொகுதி ஏற்கனவே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
News March 8, 2026
இராமநாதபுரம்: மோசடி வழக்கில் போலீஸ் ஒருவர் கைது

பல கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் உள்பட 7 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். போலி வங்கி கணக்குகள் தொடங்கி மோசடி பணத்தை பரிவர்த்தனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள், ATM கார்டுகள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் & சொத்து விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 8, 2026
UPSC தேர்வில் இராமநாதபுரம் இளைஞர் சாதனை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வின் 2025 இறுதி முடிவுகள் வெளியாகின. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வில் இந்தியா முழுவதும் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த, மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் சேக் முகம்மது ஹபிசுதீன்(26) தேசிய அளவில் 485-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.


