News December 19, 2024

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி?

image

2014ல் DMKவில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான MK அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் தங்களை கட்சியில் இணைத்துக்கொள்ளுமாறு CM ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளனர். தம்பியுடன் இணக்கமாக செல்ல அழகிரி விரும்புவதாகவும், இதனால் அவர் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் நிர்வாகிகள் சிலர் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியதாக தெரிகிறது.

Similar News

News March 9, 2026

VIRAL: 11 கிராம் தங்கம் ₹113 Only!

image

ஷாக்காக இருக்கா? ஆனால், உண்மைதான். 1959-ம் ஆண்டு 11.66 கிராம் தங்கத்தின் விலை ₹113 தான். அப்படியென்றால், 1 கிராம் தங்கம் வெறும் ₹10-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 67 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ரசீதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகியுள்ளனர். இன்றைக்கு ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் ₹₹1,19,600 தேவைப்படுகிறது. இப்போது பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தாலும், அன்றைய தேதிக்கு ₹113 அவ்வளோ பெரிய காசு!

News March 9, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் கொடுத்த HAPPY NEWS

image

மகளிர் உரிமைத்தொகை ₹1000-ல் இருந்து ₹2000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், திமுகவின் மகளிர் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது என்றும், நிறுத்த நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே ஓட்டுப்போட மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். இதனால் தான் அதிமுக தங்கள் திட்டத்தை டாப் அப் செய்து தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 9, 2026

ChatGPT-யிடம் கேட்டு எக்ஸாம் எழுதிய மாணவர்கள்!

image

டீச்சர்கள் எக்ஸாமில் பிட் அடிக்க உதவியது தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவின் 10 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் ChatGPT-யை பயன்படுத்தி தேர்வு எழுதியுள்ளனர். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த 81 டீச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே எக்ஸாம் செண்டரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!