News December 19, 2024
குமரியில் விரைவில் தொடங்கப்படும் புதிய திட்டம்

குமரி: கிராமங்களில் உள்ள ஏழைபெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.3200 செலவில் 40 நாட்டுகோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு ஊராட்சியில் 100 பயனாளிகள் வீதம் 9 ஊராட்சிகளில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் ஒப்புதலோடு திட்டம் செயல்பட தயாராக உள்ளது என கால்நடை பராமரிப்புத்துறையினர் இன்று கூறினர்.
Similar News
News March 12, 2026
குமரி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு LINK போதும்.!

குமரி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.
News March 12, 2026
குமரி: இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
குமரி: பத்மநாபபுரம் தொகுதியில் முந்துவது யார்?

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது . அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதியான இது, கடந்த 2006 முதல் திமுகவின் வசம் உள்ளது. அதேசமயம், இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள பாஜக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் 1996 தேர்தலில் முதலில் கால்பதித்து இங்குதான். இந்த முறை அதிமுக-பாஜக கைகோர்த்திருக்கும் சூழலில், தவெகவும் களமிறங்குவது வெற்றி யாருக்கு என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.


