News December 19, 2024
அம்பேத்கரின் சிந்தனைதான் நவீன இந்தியா: கமல்

நவீன இந்தியாவின் கட்டுமானத்திற்கு அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து நாட்டை விடுவித்தவர் அம்பேத்கர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மாண்பு சிதைக்கப்படுவதை எந்த இந்தியரும் சகித்து கொள்ளமாட்டார் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News March 24, 2026
தேர்தல் கருத்துக்கணிப்பு.. சற்றுமுன் அறிவிப்பு

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட ECI கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்.9-ம் தேதியும், TN-ல் ஏப்.23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என ECI உத்தரவிட்டுள்ளது.
News March 24, 2026
BREAKING: விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 தனித் தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக ‘பானை’ சின்னத்தில் போட்டியிட உள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக, தற்போது கூடுதலாக 2 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. முன்னதாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வந்தார்.
News March 24, 2026
பணக்கார வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரி தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், அசையும் சொத்து ₹328 Cr, அசையா சொத்து ₹269 Cr என மொத்தம் ₹597 Cr சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ₹25 Cr-க்கு 17.5 கிலோ தங்கம், ₹44 Cr-க்கு வைரம், ₹38 Cr-க்கு வாட்ச் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி CM-ஐ விட அதிக சொத்து வைத்திருக்கும் வேட்பாளர் இவர்.


