News December 19, 2024
ராகுல் காந்தி மீது போலீஸில் புகார்?

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும், பாஜக எம்.பி.க்களுக்கும் இடையே இன்று பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தனர். ராகுல் காந்தி தான் தங்கள் மீது காங். எம்.பி.க்களை தள்ளிவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ராகுல் மீது போலீஸில் புகார் அளிப்பது குறித்து பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
Similar News
News July 5, 2025
காதலிக்கு ‘நோ’.. மாணவி முகத்தில் கத்தி கீறல்!

+2 மாணவி ஒருவரை காதலிக்க மறுத்ததால், அவரது முகத்தில் பேனா கத்தியால் கிழித்த இளைஞர் இளைஞரை போலீஸ் தேடி வருகிறது. விருத்தாசலத்தில், ஒரு வருடமாக பின்னால் அலைந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் அருள்குமார். இந்நிலையில், இன்று பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது இந்த கொடூரத்தை செய்துவிட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
News July 5, 2025
வரலாற்றில் இன்று

1954 – பிபிசி தனது முதல் டிவி செய்தியை ஒளிபரப்பியது. 1971 – அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது PM சுல்பிகார் அலி பூட்டோ பதவி இழந்தார். 1996 – குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. 1998 – செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் தனது முதலாவது விண்கலத்தை ஏவியது.
News July 5, 2025
தேசிங்கு ராஜா 2 டிரெய்லர்.. செதச்சிட்டீங்க போங்க…

விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த டிரெய்லர் எவ்ளோ தடவ பாத்தாலும் சிரிப்பே வரல என கமெண்ட் செய்து வருகின்றனர். வித்யாசாகர் இசை தவிர டிரெய்லரில் எதுவும் இல்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றான தேசிங்கு ராஜா பெயரையாவது விட்டு வச்சிருக்கலாமே..!