News December 19, 2024
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (19.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 7, 2026
வேலூர்: 90 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கு தலா 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் என மொத்தம் 45 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 45 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
வேலூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

வேலூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
வேலூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


