News December 19, 2024
வங்கி ஊழியருக்கு காது வெட்டு.. கஸ்டமர் போல் வந்தவர் பகீர்

சென்னை T.நகர் பர்க்கிட் சாலை HDFC வங்கிக்குள் புகுந்த நபர், ஊழியர் ஒருவரின் காதை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்தவர், ஊழியர் தினேஷை சரமாரியாக வெட்டியதில் அவரது காது மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தினேஷை அரிவாளால் வெட்டிய நபரை மடக்கிப் பிடித்த சக ஊழியர்கள் மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News March 7, 2026
என் கணவருக்கு நன்றி.. லதா ரஜினிகாந்த்!

மனைவிக்கு கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு வீட்டில் கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. எனது கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். எனது முயற்சிகள் அனைத்தையும் என்னுடைய கணவருக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
News March 7, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

தேர்தலையொட்டி சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. தேர்தல் தேதியை அறிவிக்க சில நாள்களே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் PR சிவசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று EPS-ஐ இன்று சந்தித்தார். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக சிவசாமி அறிவித்தார்.
News March 7, 2026
ஈரான் போர் நீடித்தால் இந்தியாவுக்கு பாதிப்பு: SBI

ஈரான் உள்ளிட்ட மேற்காசிய பகுதியில் மோதல் நீண்ட காலம் நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று SBI-ன் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எண்ணெய் விலை $130/பேரல் வரை உயர்ந்தால் FY27-ல் (2026-27) GDP வளர்ச்சி 7% லிருந்து 6% ஆக குறையும் என்று எச்சரிக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணம் மற்றும் வர்த்தகம் தடைப்படுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.


