News December 19, 2024

மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024-2025ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பவர்டில்லர் மற்றும் விசை களை எடுக்கும் கருவி (பவர் வீடா) நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 7, 2026

நாகை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

நாகை: MLA ஒ.எஸ்.மணியன் அழைப்பு

image

வேதாரணயம் MLA ஒ.எஸ்.மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய ஜன நாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தமாக,வளரும் தமிழகம், ஐஜேகே கட்சிகளின் நிர்வாகிகளின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு ECR சாலையில் உள்ள அதிமுக மாவட்டக் அலுவலகத்தில் நடைபெறும். இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

News March 7, 2026

நாகை: குடி போதையில் அரிவாள் வெட்டு; கறிக்கடை வியாபாரி பலி

image

திருமருகல் ஒன்றியம் மருங்கூர் அச்சுதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியார்தாசன்(48). இவரிடம் மருங்கூரை சேர்ந்த கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த 1ஆம் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட மோதலில், கோபால் பெரியார்தாசனை அறிவாளால் வெட்யுள்ளார். இதில், தலையில் காயம் அடைந்த பெரியார் தாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!