News December 19, 2024
நடிகர் கோதண்டராமன் காலமானார்

பிரபல காமெடி நடிகரும் ஸ்டண்ட் மேனுமான கோதண்டராமன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65. கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கிய அவர், 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மேனாக சினிமாவில் பணியாற்றி வந்தார். இதற்குமுன், ’ஒன்ஸ் மோர்’, பகவதி, க்ரீடம், வேதாளம், திருப்பதி ஆகிய படங்களில் கோதண்டராமன் நடித்துள்ளார். #RIP
Similar News
News July 4, 2025
இரவு மழை வெளுக்க போகுது: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவள்ளூர், நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி அகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊரில் மழை பெய்யுதா?
News July 4, 2025
க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மேலாளர் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP
News July 4, 2025
PF-ல் சேரும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்

புதிதாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் அறிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை 2 தவணைகளாக அதிகபட்சம் ₹7,500 வீதம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊழியரை சேர்க்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூப்பர் பிளானா இருக்கே…