News December 19, 2024

EPSக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை சென்னை HC தள்ளுபடி செய்தது. விளம்பர நோக்கத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

Similar News

News September 8, 2025

செங்கோட்டையனின் அடுத்த பிளான்

image

தமிழகம் முழுக்க செங்கோட்டையன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கெடு விதித்த செங்கோட்டையனை முக்கிய பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செங்கோட்டையன் தன் கருத்துக்கு அதிமுக தொண்டர்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

News September 8, 2025

சிவப்பு ரோஜாவாக மலர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி

image

வசீகரிக்கும் அழகால் ரசிகர்களின் மனங்களை வென்ற ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள படங்கள் வைரலாகி வருகின்றன. பொன்னியின் செல்வனில் கடல் கன்னியாக தோன்றிய இவருக்கு ‘மாமன்’, ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது ?

News September 8, 2025

பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவிக்கு சம்பள பிரச்னையா?

image

பாகுபலி படத்தில் ராஜமாதா வேடத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாக போனி கபூர் கூறியுள்ளார். ராஜமெளலி அவரிடம் கதை சொல்லிய பிறகு தயாரிப்பு குழுவினர் சம்பளம் குறைவாக பேசியதால் ஸ்ரீதேவியை அப்படத்தில் நடிக்க அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்தார். ராஜமெளலியிடம் தயாரிப்பு குழுவினர் உண்மையை கூறாமல் தவறான தகவலை சொல்லிவிட்டதாகவும் போனி கபூர் குறிப்பிட்டார். ராஜமாதா வேடத்திற்கு ஸ்ரீதேவி பொருத்தமானவரா?

error: Content is protected !!