News December 19, 2024
தங்கம் விலை ₹520 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹520 குறைந்தது. நேற்று ₹57,080ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ₹56,560ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ₹7,135க்கு விற்பனையான நிலையில் இன்று ₹65 குறைந்து ₹7,070க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹99க்கு விற்பனையாகிறது.
Similar News
News September 8, 2025
பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவிக்கு சம்பள பிரச்னையா?

பாகுபலி படத்தில் ராஜமாதா வேடத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாக போனி கபூர் கூறியுள்ளார். ராஜமெளலி அவரிடம் கதை சொல்லிய பிறகு தயாரிப்பு குழுவினர் சம்பளம் குறைவாக பேசியதால் ஸ்ரீதேவியை அப்படத்தில் நடிக்க அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்தார். ராஜமெளலியிடம் தயாரிப்பு குழுவினர் உண்மையை கூறாமல் தவறான தகவலை சொல்லிவிட்டதாகவும் போனி கபூர் குறிப்பிட்டார். ராஜமாதா வேடத்திற்கு ஸ்ரீதேவி பொருத்தமானவரா?
News September 8, 2025
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவதாகவும், இந்த தொகை எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் மகளிருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
News September 8, 2025
செப்டம்பர் 8: வரலாற்றில் இன்று

*1944 – இரண்டாம் உலகப் போரில் வி-2 ஏவுகணை மூலம் லண்டன் நகரம் மீது தாக்குதல். *1946 – பல்கேரியாவில் முடியாட்சி ஒழிப்பு. *1954 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது. *2006 – மகாராஷ்டிரா, மாலேகான் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொலை. *2010 – நடிகர் முரளி மறைந்த நாள்.