News December 19, 2024

நீலகிரியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி கலெக்டர் விடுத்துள்ள செய்தியில், நடப்பு மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.20) ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயம், ஐடிஐ, கணினி இயக்குபவர், ஓட்டுநர் ஆகியோர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0423 2444004, 72000 19666 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

நீலகிரி: திடீர் கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் தீர்வு!

image

நீலகிரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 94421 11912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 8, 2026

நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கரை, கேஎன்ஆர் பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது யானைகள் மூன்று நாட்களாக சுற்றி வருகின்றன. எனவே குன்னூர் வனச்சரகர் ரவீந்தர நாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 8, 2026

நீலகிரி கலெக்டர் வேண்டுகோள்!

image

பந்தலூர் அருகே தாளூர் பகுதி தமிழக – கேரளா மாநில எல்லையில் கேரளம் நெடுஞ்சாலை துறையினர் மலையாள மொழியின் வரவேற்பு பலகையை பிரச்சினைக்குரிய இடத்தில் வைத்தனர். இதனால் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், இவ்விவகாரம் தொடா்பாக வயநாடு ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

error: Content is protected !!