News December 19, 2024

கார் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

image

ஒசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி முடிந்து வெளியில் வந்த 5 பெண்கள் நேற்று சாலையைக் கடக்க முயன்றனர். அந்த வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான பெண்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ யாதவ், சந்தா என்பது தெரியவந்தது. 3 பேரில் 2பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News August 21, 2025

கிருஷ்ணகிரி: தாசில்தார், விஏஓ லஞ்சம் வாங்கினால், இதை செய்யுங்க

image

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 21, 2025

இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி

image

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு 30 நாள்கள் இலவச இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர் நாளை (ஆக. 23) தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

News August 21, 2025

உங்களுடன் ஸ்டாலின் கட்டுரைப் போட்டி!

image

2021ம் ஆண்டிற்கு பின் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ‘உங்களுக்கு பிடித்த திட்டம்’ என்ற தலைப்பில் ஒருப்பக்க கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்க உள்ளார். விருப்பமுள்ளவர்கள் கட்டுரைகளை செப்.20க்குள் ungaludanstalincamp@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு புகைப்படம் (அ) PDF-ஆக அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!